» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் இருந்து நுழைபவர்களை சுட்டுதள்ளுங்கள் - வடகொரியா அதிபர் கிம் அதிரடி உத்தரவு!

சனி 12, செப்டம்பர் 2020 5:29:51 PM (IST)

கரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார். உலகமே கரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும், கரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியது.

இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வடகொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory