» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு: ராஜபக்சே குடும்பத்தில் 4 பேருக்கு பதவி!!

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 3:37:00 PM (IST)



இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் அமைச்சராகி இருக்கிறார்கள். 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்தார். 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, மகிந்தா ராஜபக்சே கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று 28 கேபினட் மற்றும் 40 ராஜாங்க அமைச்சர்களை நியமித்தார். புதிய அமைச்சரவையின் பதவி ஏற்பு விழா கண்டி நகரில் நேற்று நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு அதிபர் ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர். ராஜபக்சே நிதி, மத விவகாரம், கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி ஆகிய இலாகாக்களின் பொறுப்பை தன்வசம் வைத்துக்கொண்டு உள்ளார். 

கோத்தபய ராஜபக்சேயின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சே நீர்ப்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். அவரது மகன் ஷாசீந்திர ராஜபக்சேவுக்கு உயர் தொழில் நுட்பதுறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மகிந்தா ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். முதன் முதலாக 2010-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இப்போது முதன் முதலாக அமைச்சராகி இருக்கிறார். ஜி.எல்.பெரீஸ் கல்வி அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தனே வெளிநாட்டு அமைச்சராகவும் பதவி ஏற்று இருக்கிறார்கள். ராணுவ இலாகா தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம் இருக்கும்.

அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ஆகிய 4 தமிழர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் கேபினட் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் துறையும், அலி சப்ரிக்கு நீதியியல் துறையும் வழங்கப்பட்டு உள்ளது. ராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரனுக்கு தபால் சேவை, வெகுஜன ஊடகங்கள் அபிவிருத்தி இலாகாவும், ஜீவன் தொண்டமானுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு இலாகாவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications






Thoothukudi Business Directory