» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையின் பிரதமராக ராஜபக்சே மீண்டும் பதவியேற்பு

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 5:18:48 PM (IST)இலங்கையில் 4-வது முறையாக மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து 4-வது முறையாக மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். 

இலங்கையின் பிரதமராக இதற்கு முன் 3 முறை இருந்துள்ள ராஜபக்சே இப்போது 4-வது முறையாக பிரதமராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடைபெற்றது.  பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேபினட் மந்திரிகள், மந்திரிகள், துணை மந்திரிகள் நாளை பொறுப்பேற்கின்றனர். புதிய நாடாளுமன்றம் வருகிற 20-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory