» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி : சூப்பர் மெஜாரிட்டி பெற்றது

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 10:22:54 AM (IST)

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் மகிந்தா ராஜபக்சே.  ஆனால், அவரது சொந்த கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். இதன்பின்னர் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.  பின்பு தனது சகோதரரான மகிந்தாவை பிரதமராக்கினார்.  

ஆனால், அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள பெரும்பான்மை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  இதனால் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும், இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று பரவலால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், கடைசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

225 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மொத்தம் 1.6 கோடி வாக்காளர்களில் 75 சதவீதத்தினர் வாக்களித்தனர்.  தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளிவர தொடங்கின.  இதில், நேற்றிரவு வரை ராஜபக்சேவின் எஸ்.எல்.பி.பி. (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சி முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.  இதனால் அக்கட்சி, 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றியடைந்து சூப்பர் மெஜாரிட்டியை பெற்றுள்ளது.  சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.  இதேபோன்று நுவரெலியாவில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால், மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆகிறார்.  இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, மகிந்தா ராஜபக்சேவை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி மகிந்தா ராஜபக்சே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதனை எதிர்நோக்கி உள்ளேன்.  இரு நாடுகளும் நட்புடனும், நல்லுறவுடனும் இருக்கின்றன என தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிAug 7, 2020 - 05:27:26 PM | Posted IP 162.1*****

இந்த வெற்றியை குறித்து வைத்து கொள்ளுங்கள். இந்த வெற்றியின் மூலம் ராஜபக்சே குடும்பத்தில் பெரும் தகராறு குழப்பம் வெட்டு குத்து ஏற்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory