» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் டிக் டாக் விவகாரத்தில் திருப்பம்: மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய திட்டம்

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 10:31:41 AM (IST)

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான குறு விடியோ  செயலியான டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

அதன்படி, டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ராசாப்ட்  நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும், டிக் டாக்  செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் , அமெரிக்க அதிபர் டிரம்பை  மைக்ரோசாப்ட் சி இ ஓ சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications





Thoothukudi Business Directory