» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் கரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி: அக்டோபரில் பொதுமக்களுக்கு போட திட்டம்

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 9:19:55 PM (IST)

ரஷியாவில் கரோனா தடுப்பூசி சோதனை முடிந்தது. அக்டோபரில் பொதுமக்களுக்கு போட திட்டமிடுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர்தெரிவித்துள்ளார்.

உயிர்க்கொல்லியான கரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.

இதையொட்டி அவர் கூறுகையில், கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம் என குறிப்பிட்டார்.

தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்திருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory