» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா தடுப்பூசி: பிரபல மருந்து நிறுவனங்களுடன் இங்கிலாந்து ஒப்பந்தம்

வியாழன் 30, ஜூலை 2020 12:34:45 PM (IST)

பிரபல நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

கரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் மருந்து நிறுவனங்கள் ஈட்படுள்ளன. இந்நிலையில், 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றை உருவாக்குகின்றன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தை அடுத்த ஆண்டு கோடை காலத்துக்குள் பெற்று விடலாம் என இந்த மருந்து நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இந்நிலையில், இவ்விரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பற்றி இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மா கூறுகையில், "ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி போன்ற பல விதமான நம்பிக்கைக்கு உரிய தடுப்பூசிகளின் ஆரம்ப அணுகலை நாம் பாதுகாப்பது முக்கியம். இதனால் பொதுமக்களைப் பாதுகாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் முடியும்” என்று கூறினார்.

ஏற்கனவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கூட்டாக உருவாக்குகிற தடுப்பூசியை 10 கோடி டோஸ் வாங்குவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory