» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி

செவ்வாய் 30, ஜூன் 2020 5:38:24 PM (IST)

பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சி நகரின் பங்குச்சந்தை அலுவலகத்தில் நேற்று காரில் வந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸார், பொதுமக்கள் என 7 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கராச்சியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் சிலீப்பர் செல்கள்தான் இந்தத் தாக்குதலைச்செய்துள்ளார்கள் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி குற்றஞ்சாட்டினார். இதற்கு இந்தியத் தரப்பில் பாகிஸ்தானுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று அளித்த பேட்டியில் பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது: பாகிஸ்தானைப் போல் அல்ல இந்தியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கராச்சியில் மட்டுமல்ல உலகில் தீவிரவாதச் செயல் எங்கு நடந்தாலும் அதைக் கண்டிக்க இந்தியா தயங்காது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இதுபோல் பொறுப்பற்ற ரீதியில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இதை கடுமையாக இந்தியா மறுக்கிறது. உலக அளவில் தீவிரவாதி என்று அறியப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனைத் தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார் என்பதை குரேஷி மறந்துவிடக்கூடாது. பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes







Thoothukudi Business Directory