» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் பலி

திங்கள் 29, ஜூன் 2020 4:03:42 PM (IST)பாகிஸ்தானின் கராச்சி நகரில் பங்குச் சந்தை அலுவலகக் கட்டடத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மற்றும் 5 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்துக்குள் இன்று பயங்கர ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்தனர். கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாதுகாப்பு வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கராச்சி நகர காவல்துறை உயர் கண்காணிப்பாளர் ஹைதர் தெரிவித்துள்ளார். கட்டடத்துக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 

அதையும் தாண்டி கட்டடத்துக்குள் நுழைந்த இரண்டு பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்துக்கு வரவழைக்கப்பட்ட துணை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில், பங்குச் சந்தை கட்டட அலுவலகத்தின் பாதுகாவலர்கள் மற்றும்  காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு காவலர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காவல்துறை, ராணுவம், துணை ராணுவப் படையினர், அந்த அலுவலகக் கட்டடத்தை சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த கட்டடத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory