» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரினார்!

வியாழன் 4, ஜூன் 2020 12:28:59 PM (IST)அமெரிக்காவில் வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார்.

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், மினியாபொலிஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ந் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையில் நீதி கோரி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர்.

அமெரிக்கா முழுவதும் 40க்கும் அதிகமான நகரங்களில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களோடு உள்ளே நுழைந்த நைஜீரிய அகதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போராட்டக்காரர்களே பலர் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை போராட்ட கும்பலில் சிலர் உடைத்து தப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் பூங்கா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.  

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்தபோது காந்தி கருப்பினத்தவர் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர். கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா காந்தியை பின்பற்றி  அறவழி போராட்டம் நடத்தி சிறை சென்று "ஆப்பிரிக்காவின் காந்தி” என்று அழைக்கப்படுகிறார். அந்த மக்களின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தவரை அந்த மக்களே அடித்து உடைத்துள்ள சம்பவம் காந்திய வாதிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory