» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் நிதியை கரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்: போப் பிரான்சிஸ்

ஞாயிறு 31, மே 2020 8:43:27 PM (IST)

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் நிதியை கரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.

வாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3 மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோனார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், "தேசியத் தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். தற்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்.

நீண்டகால பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆயுதங்களுக்கு செலவழிக்கும் நிதியினை கரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைவர்களை கேட்டு கொண்டார். வாடிகன் தோட்டத்தில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆலயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

மக்கள்Jun 2, 2020 - 09:00:55 AM | Posted IP 108.1*****

மத மாற்றத்திற்கு பயன்படுத்தும் நிதியையும் கொரோனா ஆராய்ச்சிக்கு பயன் படுத்தலாமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Anbu Communications

Black Forest Cakes






Thoothukudi Business Directory