» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: பிரதமர் மோடி, முதல்வா் பழனிசாமி இரங்கல்

வியாழன் 28, மே 2020 11:42:37 AM (IST)

இலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இதன்போது நாடாளுமன்றத்தில் மஹிந்த 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமைக்கு மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சிக்காக மஹிந்த ஆற்றிய பணிகள் குறித்தும் அவர் பாராட்டினார்.

மேலும், கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை அளிக்கும் எனவும், தேவையான உதவிகளை வழங்கும் எனவும் மஹிந்தவிடம் மோடி உறுதியளித்தார்.அத்துடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவுக்கும் மஹிந்தவிடம் மோடி இரங்கல் தெரிவித்தார்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் 

இலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: இலங்கை அமைச்சராக பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றிய ஆறுமுகன் தொண்டமான், இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தாா். இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காகப் பணியாற்றியவா். அவரது மறைவு இலங்கை மக்களுக்கும், அந்த நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் கட்சிக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory