» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு

புதன் 27, மே 2020 11:29:48 AM (IST)

நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்க சீன வீரர்கள் போருக்கான ஆயத்த நிலையில் இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்கா சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

எனவே இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பின்னணியில்தான் அதிபர் ஷி ஜின்பிங் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப் பிறப்பித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான சினுவா தெரிவித்துள்ளது.சீன ராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும், எந்த ஒரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியான 2வது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory