» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட ரூ.8,360 கோடி நிதி : இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!!

திங்கள் 25, மே 2020 10:41:28 AM (IST)

அன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட இந்தியாவிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ரூ.8 ஆயிரத்து 360 கோடி நிதி கோரியுள்ளார். .

இலங்கையில் கரோனா வைரஸ் நிலவரம் குறித்து அறிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கரோனா வை கட்டுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்தார். அதற்கு கோத்தபய ராஜபக்சே, கரோனா வால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், தங்களது அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருவதால், பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளும் முறையில், இந்தியா ரூ.8 ஆயிரத்து 360 கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே ‘சார்க்’ மாநாட்டின்போது, இந்தியாவிடம் கோத்தபய ராஜபக்சே ரூ.3 ஆயிரத்து 40 கோடி கேட்டிருந்தார். அதனுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு வலியுறுத்தினார். மேலும், இந்திய நிதி உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமான பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மோடியிடம் கோத்தபய கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து

அருண் அவர்களுக்குமே 26, 2020 - 09:33:34 AM | Posted IP 162.1*****

இலங்கை போலி புத்த மத நாட்டுக்காரன் எல்லாம் இந்து மதத்துக்கே எதிரானவர்கள் , உங்களுக்கு என்ன தெரியும் ??? தமிழர்களால் பல கோயில்கள் அழிக்கப்பட்டது, வரலாறு கூறுவது உண்மை.. அவன் சீனா கிட்டே போய் பிச்சை எடுக்கட்டும் நமக்கென்ன வம்பு ??? இந்திக்கார மோடிக்கு தமிழர்கள் வரலாறு தெரியாது ...

உண்மமே 26, 2020 - 09:30:16 AM | Posted IP 162.1*****

உள்ளூரில் குடுக்க துப்பில்லை , நிறைய இந்துக்கள் பல 1000 கிலோமீட்டர் நடந்தே ஊருக்கு செல்கிறார்கள் , இந்திய மக்கள் படும் கஷ்டத்தை ஆண்டவருக்கு தான் தெரியும் , டுபாக்கூர் மோடிக்கு எப்படி தெரியும் ??

அருண்மே 26, 2020 - 01:44:34 AM | Posted IP 103.1*****

குடுக்கலானா சீனாகிட்ட போய்டுவான். எதுக்கு வம்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory