» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

சனி 23, மே 2020 8:27:15 AM (IST)



பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில்தான் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏ320-ஏர்பஸ் ரக விமானம், பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது. அதில், 90 பயணிகளும், 10 சிப்பந்திகளுமாக மொத்தம் 100 பேர் இருந்தனர்.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, என்ஜின் கோளாறு ஏற்பட்டது. அதனால் தரை இறங்க முடியவில்லை. அதனால், விமான நிலையத்துக்கு மேலே விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இரண்டு, மூன்று தடவை முயற்சித்தும் தரை இறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, எதிர்பாராமல், விமான நிலையத்துக்கு அருகே உள்ள மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications




Black Forest Cakes



Thoothukudi Business Directory