» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனா மெத்தனத்தால் உலகம் முழுவதும் கரோனா படுகொலைகள்: டிரம்ப் ஆவேசம்

வியாழன் 21, மே 2020 11:46:03 AM (IST)

சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக டிரம்ப் ஆவேசத்துடன் கூறினார்.

உலகம் முழுதும் கரோனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அமெரிக்காவில் நேற்றுமட்டும்  23,285 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 1,518 தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 1,551,853 பாதிப்புகள் மற்றும் 93,439 இறப்புகள் பதிவாகி உள்ளது. நியூயார்க் மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93  ஆயிரத்தை தாண்டி உள்ள  நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது அமைச்சர்களுடன் கரோனாவை எதிர்ப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். 

சீனா மீது தமது தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி  வரும் டிரம்ப் மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக டிரம்ப் ஆவேசத்துடன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான தனது சொல்லாட்சியை விரிவுபடுத்தினார், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீதான தவறான தகவல் மற்றும் பிரச்சார தாக்குதலுக்கு" பின்னால் சீனா ஜனாதிபதி  ஜி ஜின்பிங் இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory