» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பேச்சு வழியாக கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் - ஆயவில் தகவல்

வெள்ளி 15, மே 2020 11:52:38 AM (IST)

"பேச்சு வழியாக கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என ஆயவில் தெரியவந்து உள்ளது.

நோயாளிகள் பேசும் போது கரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் (பிஎன்ஏஎஸ்) புரோசிடிங்ஸ் இதழில் வெளியிடப்படடு உள்ளது.  

ஆய்வில் ஒரு நபர் மூடிய பெட்டியின் உள்ளே 25 விநாடிகள் "ஆரோக்கியமாக இருங்கள்” என்ற சொற்றொடரை சத்தமாக மீண்டும் மீண்டும் சொன்னார்கள். பெட்டியில் பொருத்தப்பட்ட்ட ஒரு லேசர் நீர்த்துளிகளை ஒளிரச் செய்து, அவற்றைக் காணவும் எண்ணியும் ஆய்வு செய்யப்பட்டது. நீர்த்துளிகள் அவைகள சராசரியாக 12 நிமிடங்கள் காற்றில் தங்கியிருந்தன, ஒரு நபர் பேசும் போது  உருவாகும் மைக்ரோ நீர்த்துளிகள் சுமார் 12 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு மூடப்பட்ட இடத்தில் காற்றில் தங்கி இருக்கும்,

உமிழ்நீரில் கரோனா வைரஸின் செறிவை கணக்கில் எடுத்துக்கொண்டு, விஞ்ஞானிகள் ஒவ்வொரு நிமிடமும் சத்தமாக பேசினால் 1,000 க்கும் மேற்பட்ட வைரஸ் கொண்ட நீர்த்துளிகள் 8 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மூடிய இடத்தில் காற்றில் இருக்கும் என மதிப்பிட்டு உள்ளனர். "இந்த நேரடி காட்சிப்படுத்தல் சாதாரண பேச்சு வான்வழி நீர்த்துளிகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. அவை பல்லாயிரம் நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தி வைக்கப்படலாம், மேலும் அவை வரையறுக்கப்பட்ட இடங்களில் நோயைப் பரப்பும் திறனைக் கொண்டுள்ளன" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory