» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா வைரஸ் பற்றிய தகவலை உலக சுகாதார நிறுவனம் மறைத்தது: ஜெர்மன் குற்றச்சாட்டு!!
செவ்வாய் 12, மே 2020 4:22:14 PM (IST)
கரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்ற தகவலை சீன அதிபர் கேட்டுக்கொண்டதன் பேரில் உலக சுகாதார நிறுவனம் மறைத்து வைத்திருந்து பின்னர் தாமதமாக வெளியிட்டதாக ஜெர்மன் அரசு கூறியுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் உலக சுகாதார நிறுவன தலைவர் அதானோம் கெப்ரியெசஸ் ஜனவரி மாதம் 21ஆம் தேதி தொலைபேசியில் பேசும்பொழுது கரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தாமதமாக வெளியிடும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஜெர்மன் புலனாய்வு நிறுவனம் கூறியதாக ஜெர்மன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெர்மன் பத்திரிகை டெர் ஸ்பைஜெல் வெளியிட்ட செய்திக்கு உலக சுகாதார நிறுவனம் இன்று மறுப்பு வெளியிட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் உலக சுகாதார நிறுவனத் தலைவரிடம் தொலைபேசியில் இதுவரை பேசியதே இல்லை என உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தான் சீன அரசு சார்பில் உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவ கூடும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை மறைப்பதற்காக ஜனவரி 21ஆம் தேதி சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதாக கூறுவது உண்மை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் நிறுவனத்துக்கு சீன அரசு சார்பில் கடந்த ஜனவரி மாதத்திலேயே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் மாதம் தான் கரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பரவக்கூடிய அபாயம் உள்ள தொற்றுநோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்தால் சீனாவில் இருந்து வெளியேறி உலக நாடுகளுக்கு வருவோர் அனைவரும் தடுக்கப்பட்டு இருக்கக்கூடும். அவ்வாறு தடுக்கப்பட்டு இருந்தால் பல நாடுகளின் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
திங்கள் 11, ஜனவரி 2021 10:34:22 AM (IST)

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்து
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:29:22 PM (IST)
