» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் தோன்றியது என்பது அமெரிக்காவின் ஊகமா?!

செவ்வாய் 5, மே 2020 10:55:36 AM (IST)

சீனாவின் வூஹான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கரோனா வைரஸ் தோன்றியது என்பது அமெரிக்காவின் ஊகமே என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்றால் உலகநாடுகள் கடும் வேதனைகளை அனுபவித்து வருகின்றன. சீனாவின் வூஹான் நகர் ஆய்வகத்திலிருந்து தான் கரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த வார தொடக்கத்தில் வூஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என்று கூறியிருந்தார்.

கரோனா விவகாரத்தில் சீனா வூஹான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து  நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம். அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று டொனால்டு டிரம்ப் நேற்று கூறினார். கரோனா வைரஸ் நோய் தொற்றுநோய் வெடித்தது  தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வார்த்தை போர் உச்சநிலையை எட்டியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவின் வூஹான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கரோனா வைரஸ் தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வழங்கவில்லை என கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியதாவது:- சீனாவின் வூஹானில்  உள்ள ஒரு ஆய்வகத்தில் தான் கரோனா வைரஸ் தோன்றியது என்ற கூற்றை ஆதரிக்க அமெரிக்கா இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.வைரஸின் தோற்றம் தொடர்பான எந்தவொரு தரவையும் அல்லது குறிப்பிட்ட ஆதாரங்களையும் நாங்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெறவில்லை, எனவே எங்கள் பார்வையில் இது ஒரு ஊகமாகவே உள்ளது என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory