» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் தோன்றியது: வலுவான அறிக்கை வெளியிடுவோம்- டிரம்ப்

திங்கள் 4, மே 2020 12:45:30 PM (IST)

கரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம் என அமெரிக்க அதிபர்  டிரம்ப் கூறினார்.

சீனாவின் உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தான்  கரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு ஏராளமான சான்றுகள்" உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார். இது குறித்து மைக் பாம்பியோ கூறியதாவது:- கரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை கையாளுவதில் சீனா தவறிழைத்து விட்டது.

அமெரிக்க உளவுத்துறையின் ஒரு அறிக்கையுடன் நான் உடன்படுகிறேன். அதில் கரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்ற பரந்த அறிவியல் ஒருமித்த கருத்துடன்" ஒப்புக் கொண்டது. முழு உலகமும் இப்போது பார்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன், நினைவில் கொள்ளுங்கள், சீனாவுக்கு  தரமற்ற ஆய்வகங்களை இயக்கும் வரலாறு உள்ளது. கரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான ஆரம்பகாலத்தில் சீன முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. தவறான தகவலை அளித்துள்ளது அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கியது. ஜனாதிபதி டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார்: பொறுப்புள்ளவர்களை நாங்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என கூறினார்.

பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- கரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து  நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம். அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இது உலகளாவிய தொற்றுநோயாக மாறுவதற்கு முன்னர் சீனா இந்த நோயின் அளவு மற்றும் ஆபத்து குறித்து உலகை தவறாக வழிநடத்தியது என்பதில் தனக்கு சந்தேகம் இல்லை. தனிப்பட்ட முறையில், அவர்கள் மிகவும் பயங்கரமான தவறு செய்ததாக நான் நினைக்கிறேன்.அவர்கள் அதை மறைக்க முயன்றனர் என கூறினார். அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரடியாக விமர்சிக்க டிரம்ப் மறுத்துவிட்டார், அவரை ஒரு வலுவான தலைவர் என்று அழைத்தார்.நான் அவருடன் ஒரு நல்ல உறவைக் கொண்டுள்ளேன் என கூறினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory