» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு

ஞாயிறு 3, மே 2020 10:22:06 AM (IST)

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் அங்கேயே சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறவும் அனுமதி வழங்கியது. 

அதன்படி நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு நடைபெற இருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "கரோனா வைரஸ் காரணமாக நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சற்றும் மோசமாக இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது சிகிச்சை தொடர்கிறது, அவருக்கு உங்கள் பிரார்த்தனை தேவை” என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory