» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இன்னும் 9 மாதங்களில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் : பில்கேட்ஸ் நம்பிக்கை

சனி 2, மே 2020 12:33:01 PM (IST)

இன்னும் 9 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளில் கரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமா 210-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தலாம் என்று சில ஆண்டுகள் முன்பு உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் பில்கேட்ஸ்சமீபத்தில் கூறியதாவது:- கரோனாவுக்கு பரிந்துரை செய்யப்படும் தடுப்பு மருந்துகள் சிறந்த பலன் கொடுப்பவையாக இல்லை. பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் உயிர்களை காப்பாற்றுமே தவிர, நம் அனைவரையும் அது பழைய பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருமா என்பது தான் கேள்வி குறி தான், 

இதனால் கரோனாவுக்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை உலகில் உள்ள அனைவரும் கரோனாவிடமிருந்து பாதுகாப்பு இல்லாதவர்களாக தான் இருப்போம். உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கரோனாவுக்கான சிறந்த, பாதுகாப்பான மருந்தினை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.அந்த மருந்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் அனைத்து பாகங்களுக்கும் விரைவில் சென்றடைய வேண்டும். இது மாதிரியான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்து இன்னும் 9 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளில் கரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory