» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதற்கு ஆதாரம் இல்லை: ஆஸ்திரேலிய பிரதமர்

வெள்ளி 1, மே 2020 6:00:33 PM (IST)

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவியது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கு அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்திருக்கும் வேளையில் சீனா கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.

ஆனால் சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசியதாவது, "சீனாவிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்று எங்களுக்கு தெரியும்.வூஹான் நகரிலிருந்து கரோனா வைரஸ் பரவியது எங்களுக்கு தெரியும்.ஆனால் சினாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரம் இல்லை " என்று கூறியுள்ளா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory