» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா தடுப்பு பணிகள்; இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி அறிவிப்பு

வியாழன் 30, ஏப்ரல் 2020 12:21:31 PM (IST)

கரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவில் கரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது.  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை பெருமளவில் குறைத்துள்ளது. பிற தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கரோனா வைரசை எதிர்கொள்ள மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6ந்தேதி ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. 

இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.  இதனால் மொத்தம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறும்பொழுது, கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு இந்த கூடுதல் நிதியானது ஆதரவாக இருக்கும்.  இந்த உதவியானது, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான மற்றும் உறுதியான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும் என்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் கூறியுள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது, கரோனா தொற்று பாதித்தோரை கவனித்து கொள்வது, அத்தியாவசிய பொது சுகாதார தகவல்களை சமூகத்தினரிடம் எடுத்து செல்வது மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியாவுக்கு இந்த உதவி பயனளிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory