» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

வியாழன் 30, ஏப்ரல் 2020 9:01:39 AM (IST)

இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. 2 மனைவிகளையும் விவகாரத்து செய்த இவர், கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இந்த ஜோடி திருமணத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அறிவித்தது, மேலும் கோடை கால ஆரம்பத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கேரி சைமண்ட்ஸ் நேற்று லண்டன் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.நல்ல முறையில் பிரசவம் பார்த்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் போரிஸ் ஜான்சனும், கேரி சைமண்ட்சும் நன்றி தெரிவித்துள்ளனர். முன்னதாக கரோனா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போரீஸ் ஜான்சன், தொற்றில் இருந்து குணமடைந்து, கடந்த திங்கட்கிழமை பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory