» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவில் இருந்து மீண்டது நியூசிலாந்து: தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் திறப்பு

செவ்வாய் 28, ஏப்ரல் 2020 4:42:45 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் நியூசிலாந்து நாட்டில்  சில கட்டுப்பாடுகளுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் நியூசிலாந்து, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கரோனாவால் 1,472 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,214 பேர்(82%) சிகிச்சை பெற்று கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த சில நாள்களாக அங்கு ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. நேற்று 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு கரோனா பாதிப்புக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடக்கம் முதலே எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது கரோனாவில் இருந்து அந்நாடு மீண்டுள்ளது. இதையடுத்து, இன்று முதல் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகளுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் பேர் இன்று பணிக்குத் திரும்பியுள்ளனர். மேலும் குறைந்த ஊழியர்களுடன் குறிப்பிட்ட பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியுடன் நீச்சலில் ஈடுபடுவது உள்ளிட்ட சில பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அருங்காட்சியகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், வணிகவளாகங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். 

நாங்கள் கரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக கூற முடியாது. அதற்காக முயற்சி எடுத்து வருகிறோம். ஆனால், கரோனா பரவல் மூலங்கள் குறித்து தெளிவடைந்துவிட்டோம். அதனாலே எங்களால் இவ்வளவு விரைவாக வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என்று அவர் தெரிவித்தார். யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை நியூசிலாந்து விரைவில் எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes


Thoothukudi Business Directory