» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு; கடைகள் திறப்பு: கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கஅனுமதி

செவ்வாய் 28, ஏப்ரல் 2020 11:11:56 AM (IST)சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவை தளர்த்த அரசு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கரோனாவால் சுமார் 139 பலியாகியுள்ள நிலையில் சுமார் 17522 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்த இன்றைய நகரங்களின் பட்டியலில் 294 பாதிப்புகளுடன் ஜித்தா முதலிடத்திலும், 218 புதிய பாதிப்புகளுடன் மக்காவும், 202 பாதிப்புடன் மதீனாவும், ரியாத் 178 மற்றும் 126 பாதிப்புடன் பாசிஹும் உள்ளது. ரமலான் நோன்பை முன்னிட்டு சவுதி அரேபியா சில கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் தளர்த்தியிருந்தாலும், தேவைப்படும் போது மட்டுமே வெளியே செல்லவும், முககவம்ச் அணியவும், சமூக தூரத்தை பராமரிக்கவும், கூட்டத்தைத் தவிர்க்கவும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களை வற்புறுத்துகிறார்கள்.

சவுதி அரேபியாவில் கரோனா ஊரடங்கை தளர்த்த அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டுள்ளதாக அதிகார பூர்வ உத்தரவை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 13 வரை மெக்கா நகரம் மற்றும் சில் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவை தளர்த்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சில்லறை கடைகள், ஷாப்பிங் சென்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதையும் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதையும் இந்த உத்தரவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சமூக இடைவெளி மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால் உணவகங்கள், சினிமாக்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வசதிகளை மூடுவதா என்பதை தீர்மானிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டுவிடுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory