» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனப் பொருட்கள் மீது கரோனா வரி விதிக்க வேண்டும் : அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

ஞாயிறு 26, ஏப்ரல் 2020 7:28:52 PM (IST)

சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கரோனா  வரி விதிக்க வேண்டும் என்று ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் காரணமாக இறந்தவர் எண்ணிக்கை 53 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது 10 லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .அமெரிக்க நகரத்தின் தெருக்களில் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்று போய்விட்டது அமெரிக்காவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் அதனால் அவர்களின் வருமானமும் குறைந்துள்ளது .வேலைவாய்ப்பு குறைவு. வருமானக் குறைவு. தெருக்களில் போக்குவரத்து நிறுத்தம் ஆகியவை அமெரிக்க மக்களின் மனநிலையை கடுமையாக பாதித்துள்ளது.தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு எல்லாம் காரணம் சீனா தான் என்ற கோபத்தை ஆளும் குடியரசுக் கட்சி எம்பிக்களும் அதிகாரிகளும் தூண்டி வருகிறார்கள்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் போட்டியிட்டால் துணை அதிபராக நிக்கி ஹாலே என்பவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக சீன தெரிவித்த பொய்களை எல்லாம் எடுத்துரைத்து அமெரிக்காவின் இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என ஹாலே வாதாடி வருகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமானவர் லிண்ட்சே கிராம். இவர் கோரிக்கைதான் மிகவும் கடுமையான பாதிப்பை உலக அரங்கில் ஏற்படுத்தக்கூடியது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர் .அமெரிக்காவின் நிதி பத்திரங்களில் சுமார் ஒரு லட்சம் கோடி டாலர் அளவுக்கு சீனா முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு முழுக்க செல்லுபடி ஆகாது என்று அமெரிக்க அரசு அறிவிக்க வேண்டும் .அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இதற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று லிண்ட்சே கிராம் கூறியுள்ளார்.

உலகிலுள்ள பல நாடுகள் அமெரிக்காவின் நிதி பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் கூட அமெரிக்காவின் நிதி பத்திரங்களில் முதலீடு செய்கின்றன .சீனாவின் முதலீட்டை ரத்து செய்வதனால் மற்ற நாடுகளில் முதலீடு தொடர்பாக அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்..அமெரிக்கா தன்னிச்சையாக சீனாவின் முதலீட்டை ரத்து செய்தால் இது உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் .எனவே இந்த யோசனை பரிசீலனைக்கு கூட தகுதியற்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சிலர் செலக்ட் உறுப்பினர்கள் சீனாவிலுள்ள அமெரிக்க தொழில் நிறுவனங்கள் எல்லாவற்றையும் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்க வேண்டும். அமெரிக்கக் கம்பெனிகள் சீனாவில் பல உள்ளன அவை மருந்துப் பொருள்களையும் மருத்துவ உபகரணங்களையும் தயாரிக்கின்றன .சில கம்பெனிகள் சீனாவில் வெண்டிலேட்டர்களைக்கூட தயாரிக்கின்றன .அதே வெண்டிலட்டர் களை நாம் சீனாவில் இருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது அதனால் சீனாவில் உள்ள அமெரிக்கக் கம்பெனிகள் எல்லாவற்றையும் அமெரிக்காவுக்கு திருப்பி நாம் அழைக்க வேண்டும் என்று சில செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க மக்களில் 47% பேர் சீனாவுக்கு எதிரான கருத்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது சீனாவை எதிர்க்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கை 66 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது கரோனா வைரஸ் வரி விதிக்கலாம் என்று சில செனட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் சிலர் குடியரசு கட்சி எம்பிக்கள் என் கருத்து ஆதரித்த போதிலும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எதுவும் முழுமையாக திட்டமிட்ட வகையில் இன்னும் உருப் பெறவில்லை என்று கூறலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory