» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவ குழுவை அனுப்பியது சீனா

ஞாயிறு 26, ஏப்ரல் 2020 7:01:28 PM (IST)

கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரசை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொள்ளவில்லை.கடந்த 2011-ம் ஆண்டு தலைவராக வந்தபின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் ஜாங் அன் தவிர்த்ததால் இது பல சந்தேகங்களை எழுப்பியது. 

இதனிடையே சமீபத்தில் கிம் ஜாங் அன்னுக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாக கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீன வெளியுறவு துறையின் மூத்த உறுப்பினர் தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் பீஜிங்கில் இருந்து வட கொரியாவுக்கு புறப்பட்டதாக வடகொரியா விவகாரங்களை கையாளும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory