» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயல் தாக்குதல் - மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

சனி 25, ஏப்ரல் 2020 8:11:25 AM (IST)

கரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஏற்கனவே நிலைகுலைந்துள்ள அமெரிக்க மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டது. இதில் 7 பேர் பலியாகினர்.

கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், அந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. அதன்படி அங்கு கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 10 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

கரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஏற்கனவே நிலைகுலைந்துள்ள அமெரிக்காவை இயற்கை பேரிடர்களும் தங்கள் பங்குக்கு திணறடித்து வருகின்றன. கடந்த வாரம் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டது. மிசிசிப்பி, டெக்சாஸ், அலபாமா, லூசியானா ஆகிய மாகாணங்களை புயல் தாக்கியதை தொடர்ந்து, கனமழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் பலியாகினர்.

இந்பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை நேற்று முன்தினம் புயல் மற்றும் சூறாவளி கடுமையாக தாக்கியது. ஒக்லஹோமா, டெக்சாஸ் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் புயல் காற்று சுழன்றடித்தது. புயலை தொடர்ந்து, பயங்கர சூறாவளி காற்றும் வீசியது. புயல் மற்றும் சூறாவளியில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனிடையே, புயல் மற்றும் சூறாவளியை தொடர்ந்து, மேற்கூறிய 3 மாகாணங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டியது. பல இடங்களில் பெரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தெரிகிறது.கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 3 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் மாயமாகி உள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை 12 புயல்கள் தாக்கியதும், இதில் 76 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே கொலைகார கரோனா வைரசால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து வரும் நிலையில் புயல், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களால் மக்கள் உயிரிழப்பது அமெரிக்காவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory