» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவை எதிர்ப்பதில் இந்தியர்களுக்கு உடல் வலிமையை விட மனவலிமை அதிகம்- சீன நிபுணர்

வெள்ளி 24, ஏப்ரல் 2020 8:18:34 PM (IST)

கரோனாவை எதிர்ப்பதில் இந்தியர்களுக்கு உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக இருக்கிறது என சீனாவின் கரோனா தடுப்பு நிபுணர் சாங் வென்ஹோங் பாராட்டி உள்ளார்.

இந்தியாவில் இருக்கும் சீன மாணவர்களுக்காக டெல்லி சீன தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ கலந்துரையாடலில் சீனாவின் கரோனா தடுப்பு நிபுணர் சாங் வென்ஹோங் பேசும் போது : கரோனாவை எதிர்ப்பதில் இந்தியர்களுக்கு உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக இருக்கிறது, மதவழிபாட்டுத் தலம் ஒன்றில் முககவசம் அணியாமல் மக்கள் திரண்டதை தாம் கண்டதாக கூறிய அவர், அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தேன்

கரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்தாலும், அது அமெரிக்காவை விட குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்படலாம். 90 சதவிகிதம் பேருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory