» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா தொற்று : சீனாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
வியாழன் 23, ஏப்ரல் 2020 4:07:59 PM (IST)
கரோனா தொற்று தொடர்பாக சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்து உள்ளது. இது அபத்தமானது என்று சீனா கூறி உள்ளது.

ஜெர்மனி, அமெரிக்கா மட்டுமின்றி கரோனா தொற்றால் நாளுக்கு நாள் எகிறும் மரண எண்ணிக்கைகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவரும் ஐரோப்பிய நாடுகள் பல சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. சீனாவுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் மிசவுரி மாகாணம் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. கரோனா வைரஸ் தாக்குதல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் முதலில் வழக்கு போட்ட மாகாணம் என்ற பெயரை இதன்மூலம் மிசவுரி மாகாணம் பெற்றுள்ளது.
மிசவுரியின் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கை அட்டார்னி ஜெனரல் எரிக் சுமிட் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சீனா ஜெர்மனி வெறுப்பை உமிழ்வதாகவும், உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிரத்தொற்று நோய்க்குக் குறிப்பிட்ட ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது மோசமான செயல் என்றும்,இது அயல்நாட்டு வெறுப்பையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயல் எனவும் சீனா விமர்சித்தது.
கரோனா வைரஸ் தோன்றியது எவ்வாறு என்பதைக் கண்டறிவதற்கான அமெரிக்க விசாரணைக் குழு வருமானால் அதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறிவிட்டது.மேலும் இந்த விவகாரம் தொடர்பில் சீன வெளியுறவுத் துறை அளித்திருக்கும் விளக்கத்தில்,இந்த கரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான எதிரி. உலகின் எப்பகுதியிலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம்.எஞ்சிய நாடுகளைப் போலவே சீனாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சீனா குற்றவாளிகள் அல்ல. வைரஸால் பாதிக்கப் பட்ட ஒரு நாடு அதை உருவாக்கியதாகக் கூறுவது உண்மையல்ல.
அதே நேரம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா எடுத்த முன்மாதிரியான முயற்சிகளையும் அதில் கிடைத்த மதிப்புமிக்க அனுபவத்தையும் நாங்கள் உலக சமுதாயத்தின் முன்பு வெளிப்படுத்தியதற்காக எங்களைச் சர்வதேசம் பாராட்டியதை நினைவில் கொள்ள வேண்டும். 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடிதான் உலகளாவியப் பொருளாதார நெருக்கடியாக மாறியது.இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வே.ண்டும் என யாராவது கேட்டார்களா? என்றும் சீனா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியதாவது:-அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு உண்மை மற்றும் சட்டபூர்வமானது இல்லை. இது அபத்தமானது.இந்த வழக்கு தீங்கிழைக்கும் துஷ்பிரயோகமாகும். இது சர்வதேச சட்டத்தில் சமமான இறையாண்மையின் அடிப்படை சட்டம் மற்றும் கொள்கையை மீறுகிறது. தொற்றுநோய்களில் சீன அரசாங்கத்தின் பதில் அமெரிக்க நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்டது அல்ல. இதுபோன்ற கட்டுப்பாடுகள் துஷ்பிரயோகம் செய்வது அமெரிக்காவில் உள்நாட்டில் தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கு உகந்ததல்ல என்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு எதிரானது என்றும் ஜெங் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
திங்கள் 11, ஜனவரி 2021 10:34:22 AM (IST)

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்து
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:29:22 PM (IST)
