» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா நோய்த்தொற்று குறித்து ஜனவரி 30ஆம் தேதியே எச்சரித்தோம்: உலக சுகாதார மையம்

வியாழன் 23, ஏப்ரல் 2020 3:49:03 PM (IST)

கரோனா நோய்த்தொற்று குறித்து கடந்த ஜனவரி 30ஆம் தேதியே அனைத்து நாடுகளுக்கும் நெருக்கடி நிலையைச் சரியான நேரத்தில் அறிவித்தோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர்டெட்ரோஸ் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகளில் புதிதாக நோய்த் தொற்றுகள் மீண்டும் எழுச்சி கண்டுள்ளன, அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள்தான் நிலவுகிறது என்றும் தெரிவித்தார். 

மேலும் ஐ.நா. சுகாதார நிறுவனம் நோய்த்தொற்று குறித்த உலக அளவிலான அவசர நிலையைக் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்தது என்றும் அது சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்தார். "மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலான இடங்களில், நோய்த்தொற்றின் தாக்கம் சீராக அல்லது குறைந்து வருகிறது" என்று கூறினார்.  மேலும் "பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் புதிய நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை காண முடிகின்றது." 

உலக அளவில் பெரும்பாலான நாடுகள் இன்னும் நோய்த்தொற்றைக் கையாள்வதில் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளன. மேலும் ஆரம்ப கட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட சில நாடுகளில் தற்போது மீண்டும் புதிய நோய்த்தொற்று பாதிப்புகளைக் காண முடிகிறது என்று கூறினார். "எந்த தவறையும் செய்துவிடாதீர்கள்" என்று குறிப்பிட்ட அவர், "நாம் இன்னும் நீண்ட  தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நோய்த்தொற்று நீண்ட காலம் நம்மோடு இருக்கப்போகிறது" என்றும் அவர் தெரிவித்தார்". 

இந்த கரோனா நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார மையம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், உலக நாடுகள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் கடந்த ஜனவரி 30ஆம் தேதியே அனைத்து நாடுகளுக்கும் நெருக்கடி நிலையைச் சரியான நேரத்தில் அறிவித்தோம் என்றும், உலகம் செயல்படுவதற்குப் போதுமான நேரம் இருந்தது என்று டெட்ரோஸ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory