» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு!!

வியாழன் 23, ஏப்ரல் 2020 12:21:43 PM (IST)

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உங்கள் தலைமைப் பண்பையும், கரோனா வைரஸ் பரவலை குறைப்பதற்கான உங்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கை உடனடியாக அமல்படுத்தியது, சோதனைகளை அதிகப்படுத்தியது, ஹாட்ஸ்பாட்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதலை மேம்படுத்தியது, டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, ஆகிய காரணங்களுக்காக பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

"டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி ஆரோக்கிய சேது செயலியை வெளியிட்டு, அதன்மூலம் வைரஸ் பாதிப்படைந்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, மற்றும் மக்களுக்கு தகவல்களை எடுத்து செல்வது சிறப்பான செயல்" என்றும் அவர் கூறியுள்ளார். பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளிக்கும் நிறுவனமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவிற்கும் பல உதவிகளை இவர்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory