» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவு: 18 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு

புதன் 22, ஏப்ரல் 2020 8:33:25 AM (IST)18 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்து ஒரு பேரல் விலை 20 டாலருக்கு கீழ் குறைந்தது.

கரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளால் சர்வதேச அளவில் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. எனவே கச்சா எண்ணெய் விலையும் சரிவடைந்து வருகிறது. நேற்று ஒரு பேரல் பிரென்ட் எண்ணெய் விலை வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் 20 டாலருக்கும் கீழ் சரிந்து 18.10 டாலராக வீழ்ச்சி கண்டது. அது 18 ஆண்டுகளில் இல்லாத சரிவாக இருந்தது. இதற்கு முன் 2001-ஆம் ஆண்டில்தான் எண்ணெய் விலை இந்த அளவிற்கு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடும் ஏற்ற இறக்கங்களுக்குப் பின் இறுதியில் ஒரு பேரல் விலை 1.51 டாலரில் முடிவுற்றது. 

முன்பேர வர்த்தகத்தில் ஜூன் மாத டெலிவரிக்கான பிரென்ட் எண்ணெய் விலையும் பேரல் ஒன்றுக்கு 5.25 டாலர் (21 சதவீதம்) சரிந்து 20.32 டாலராக குறைந்தது. அமெரிக்க எண்ணெய் சந்தைகளிலும் விலை பெரிதும் குறைந்து காணப்படுகிறது. தேவை குறைந்துள்ளதால் பல்வேறு நாடுகளிலும் கச்சா எண்ணெய் கையிருப்பு உயர்ந்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 17-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் எண்ணெய் இருப்பு 1.61 கோடி பேரல்கள் அளவிற்கு அதிகரித்து இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, கடந்த திங்கள்கிழமை அன்று முன்பேர வர்த்தகத்தில் மே மாத டெலிவரிக்கான எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90 சதவீதம் சரிவடைந்து இருந்தது.

‘ஓபெக்’ எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், ரஷியா உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளும் நாள் ஒன்றுக்கு 97 லட்சம் பேரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும் மே மாதத்திற்குப் பின்னரே உற்பத்தி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவடைந்து வருவதால் நமது எண்ணெய் இறக்குமதி தொடர்பான முந்தைய மதிப்பீடுகள் தற்போது மாறத் தொடங்கி உள்ளன. எனவே எண்ணெய் இறக்குமதி செலவினம் நடப்பு நிதி ஆண்டில் (2020-21) பல ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பெருமளவு குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory