» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிம் உடல்நிலை குறித்த செய்திகளில் உண்மை இல்லை - தென்கொரிய அதிகாரிகள் விளக்கம்

செவ்வாய் 21, ஏப்ரல் 2020 5:53:14 PM (IST)

கிம் ஜாங் உன் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று தென்கொரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் கொரோனாவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்திலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வந்தவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது நாட்டை மர்ம தேசமாக வைத்திருக்கும் கிம் ஜாங் அன் கடந்த சில வாரங்களாகவே பொது வெளியில் தோன்றவில்லை.  கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. 

இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை. கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. 

இந்நிலையில், இருதயக் கோளாறுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிம் ஜாங் அன், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக திடீரென செய்திகள் வெளியாகின. கிம் ஜாங் அன் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின. கிம் ஜாங் அன் உடல் நலம் பற்றிய செய்திகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதாக அமெரிக்காவும் அறிவித்தது. ஆனால், கிம் ஜாங் அன் உடல் நிலை மோசமாக இருப்பதாக வெளிவரும் தகவல்களை அண்டை நாடான தென்கொரியா மறுத்துள்ளது. தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory