» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் முடிவு

செவ்வாய் 21, ஏப்ரல் 2020 4:36:10 PM (IST)

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தற்காலிகமாக தடை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 7,92,759 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனவே, அமெரிக்காவில் தீவிரமாகப் பரவி வரும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன் ஒருபகுதியாக, அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுக்காகவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory