» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரெஞ்சு போர் கப்பலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

திங்கள் 20, ஏப்ரல் 2020 11:33:16 AM (IST)பிரெஞ்சு விமானம் தாங்கி போர் கப்பலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

சார்லஸ் டி கல்லி என்பது பிரெஞ்சு கடற்படையின் 10-வது விமானம் தாங்கி போர் கப்பல் ஆகும். அந்த படையில் முதன்முதலாக அணுசக்தியில் இயங்கும் போர் கப்பலும் இதுதான். இந்த கப்பல் மத்திய தரைக்கடல், வடகடல், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக வந்துள்ளது. இந்த கப்பலையும் கரோனா வைரஸ் தொற்று நோய் விட்டு வைக்கவில்லை. இதில் வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,760 பேர் வந்த நிலையில், அவர்களில் 1,046 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பதாக கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இதுபற்றி பிரெஞ்சு கடற்படை தளபதி கிறிஸ்டோப் பிராசக் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த கப்பலில் முறையாக பின்பற்றப்படவில்லை. இது கரோனா வைரஸ் பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிய எங்களை அனுமதிக்கவில்லை. எனவே அதை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கப்பல் தனக்குரிய டூலோன் தளத்துக்கு கடந்த வாரம் வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து அதில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.இந்த கப்பலில் பணியாற்றிய ஒரு வீரர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையேயான கூட்டு பரிமாற்ற திட்டத்தின்கீழ், இந்த கப்பலில் பணியாற்றி வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் 2 பேரையும் கரோனா வைரஸ் தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் கரோனா வைரஸ் பரவியது எப்படி? என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரான்ஸ் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அமெரிக்காவின் தியோடர் ரூஸ்வெல்ட் போர் கப்பலிலும் இப்படி கரோனா வைரஸ் பரவியதும், அதன் கேப்டன் பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்க கடற்படை அமைச்சர் தாமஸ் மோட்லி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory