» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாநிலங்களை,நகரங்களை முடக்குவது ஆபத்து: உலக சுகாதார நிபுணர் எச்சரிக்கை

திங்கள் 23, மார்ச் 2020 5:31:25 PM (IST)



வெறுமனே மாநிலங்களை,நகரங்களை முடக்குவது ஆபத்து என உலக சுகாதார நிபுணர் தெரிவித்து உள்ளார்.

சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதி புதிய கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மற்றும் பள்ளிகள், பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெறுமனே மாநிலங்களை, நகரங்களை முடக்குவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கரோனா நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, வைரஸ் உள்ளவர்கள், அவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் தான் நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது. நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் முடக்கப்படுவது தான் இப்போது ஆபத்து, வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றால், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது, நோய் மீண்டும் தீவிரமாக பரவும்.

நாம் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வைரஸை குறித்த ஆய்வை தொடர வேண்டும், வைரஸை எதிர்த்துப்  பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் ஒன்று மட்டுமே அமெரிக்காவில் சோதனைகளைத் தொடங்கியது. மக்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். இது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு வருடமாவது ஆகும், தடுப்பூசிகள் வரும். ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க இப்போது செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Anbu Communications



Thoothukudi Business Directory