» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது : ஜப்பான் பிரதமர்

திங்கள் 23, மார்ச் 2020 4:58:52 PM (IST)

கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது "தவிர்க்க முடியாதது" என்று ஜப்பானின் பிரதமர் கூறினார். 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. கரோனா என்ற கொடிய வைரசின் பாதிப்பு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்று ஒரு பக்கம் சந்தேகம் நிலவினாலும், அதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசாங்கமும், ஒலிம்பிக் கமிட்டியினரும் ஜரூராக செய்து வருகின்றனர்.

ஆனால் கரோனா வைரஸ்பீதியால் பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டியில்கலந்து கொள்வதில் இருந்து விலகி உள்ளன. கனடாவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்கள் தங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தை மேற்கோள் காட்டி இந்த கோடையில் நடத்தப்பட்டால் விளையாட்டுகளுக்கு அணிகளை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்து உள்ளன. ஜூலை 24 ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி 2020 போட்டி நடைபெறாது என முதல் முறையாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது "தவிர்க்க முடியாதது" என்று ஜப்பான் பிரதமர் இன்று ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ஷின்சே அபே பேசும் போதுகூறியதாவது:-  ஒரு "முழுமையான" ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் "இது கடினமாகிவிட்டால், முதலில் விளையாட்டு வீரர்களின் உடல் நிலையை  கருத்தில் கொண்டு, ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். "ரத்து செய்வது ஒரு விருப்பமல்ல, "விளையாட்டுகளை கைவிடமாட்டோம், இது "எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது, யாருக்கும் உதவாது"என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory