» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கியதா? ஈரான் குற்றச்சாட்டு

திங்கள் 23, மார்ச் 2020 12:41:55 PM (IST)

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம் என ஈரான் உச்ச தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.

கரோனா வைரஸால் உலகமே கதிகலங்கி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,643 ஆக உயர்ந்து உள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது.

இத்தாலியைப் போல ஈரானிலும் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20,610 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். இது குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை நான் நிராகரித்துவிட்டேன்.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள்தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது. உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினர். மேலும், அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள் என கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory