» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கரோனா வைரசால் 500 பேர் பாதிப்பு: ஊரடங்கு அமல்படுத்த இம்ரான் கான் மறுப்பு

சனி 21, மார்ச் 2020 4:01:59 PM (IST)

பாகிஸ்தானில் கரோனா வைரசால் 500 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு முழு அடைப்புக்கான உத்தரவை அமல்படுத்த  பிரதமர் இம்ரான் கான் மறுத்தள்ளார்.

பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் வரை பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தில் கோவிட் காய்ச்சலுக்கு மட்டும் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் முழு அடைப்பை அமல்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, "முழு அடைப்பு என்பது ஊரடங்கு உத்தரவைப் போன்றது. அது தேவையில்லாத பதற்றத்தை அளிக்கும். அதை நாங்கள் அளிக்க விரும்பவில்லை. இதனால் எல்லை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு ஆன்மிக யாத்திரை சென்றவர்கள் மூலமாகத்தான் அந்நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய தகவலின்படி உலகம் முழுவதும் 2,76,474 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,586 பேர் பலியாகியுள்ளனர். சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory