» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொரோனா பீதி: ஜி7 மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த டிரம்ப் முடிவு

சனி 21, மார்ச் 2020 8:53:01 AM (IST)

கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஜி-7 மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். 

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற ஜூன் 10 முதல் 12 வரை அமெரிக்காவில் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநாடு நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.  

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கேம்ப் டேவிட்டில் நடைபெற இருந்த ஜி-7 மாநாடு ரத்து செய்யப்படுகிறது.  இதன் மூலம், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தங்களின் நேரம் மற்றும் ஆற்றலை பொதுமக்களின் சுகாதார சவாலை எதிர்கொள்வதற்காக பயன்படுத்த முடியும். இந்த மாநாடு வீடியோ காரன்பரன்ஸ் மூலமாக நடத்தப்படும்.  இந்த வாரம் நடத்தப்பட்டதை போல வரும் ஏப்ரல், மே மாதங்களில் அதிபர் டிரம்ப் ஜி7 உறுப்பு நாடுகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாடுவார். தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,”என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory