» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு

புதன் 19, பிப்ரவரி 2020 4:28:47 PM (IST)

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கிராமப்புற பகுதியில் இன்று முற்பகலில் 2 விமானங்கள் பறந்து சென்றுள்ளன.  விமானங்கள் தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தபொழுது, நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. அவை தீப்பிடித்தபடியே வயலில் விழுந்து நொறுங்கின.  விபத்தில் இரு விமானங்களின் பாகங்களும் உடைந்து, தீப்பிடித்து ஆங்காங்கே கிடந்தன.  இதில் இரு விமானங்களிலும் இருந்த தலா 2 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory