» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சமூக ஊடகங்களில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியாக உயர்வு!!

வெள்ளி 14, பிப்ரவரி 2020 5:44:48 PM (IST)

சமூக ஊடகங்களில் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில்  வாட்ஸ்-அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை எட்டியுள்ளது.

சமூக ஊடக தளமான வாட்ஸ்-அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ்-அப் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க முடியாத டிஜிட்டல் லாக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஹேக்கர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Anbu Communications




Thoothukudi Business Directory