» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடும் வறட்சியால் 5ஆயிரம் ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன : ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு

வியாழன் 16, ஜனவரி 2020 5:36:52 PM (IST)

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் காட்டு தீ மேலும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. காட்டுத்தீயால் பல விலங்குகள், பறவைகள் அழிந்துள்ளன. மக்கள் பலர் காட்டுத்தீயால் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபேரல் வகை ஒட்டகங்கள் ஏராளமான தண்ணீரை குடிப்பதால் தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரிக்காமல் இருக்கு ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், விலங்குகள் ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

இவன்Jan 17, 2020 - 10:28:12 AM | Posted IP 162.1*****

இன்னும் கொஞ்ச நாள் ல மக்களை கொல்ல வருவார்கள் , நாம் மோசமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Thoothukudi Business Directory