» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது : இலங்கை அரசு அனுமதி மறுப்பு?

புதன் 15, ஜனவரி 2020 10:22:30 PM (IST)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்து இருந்தார். 

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் மூலம், இந்த தகவல் உறுதியாகி உள்ளது. அரசியல் நடவடிக்கைக்காகவே அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது என, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைJan 16, 2020 - 09:29:34 AM | Posted IP 173.2*****

இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எல்லா இந்துமக்களுக்கே எதிரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thalir Products


Black Forest Cakes



Thoothukudi Business Directory