» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செவ்வாய் 14, ஜனவரி 2020 8:37:43 AM (IST)

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை முஷரப் அதிபராக இருந்தார். அப்போது, 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர நிலையை அமல்படுத்தினார். அதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பதவிக்கு வந்த நவாஸ் ஷெரீப் அரசு, கடந்த 2013-ம் ஆண்டு, முஷரப் மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்தது. 

அவசர நிலையை அமல்படுத்தியதற்காக, இவ்வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க இஸ்லாமாபாத்தில் தனி நீதிமன்றம்  அமைக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த மாதம் 17-ந் தேதி தனி நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. முஷரப், தற்போது துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனி நீதிமன்றம்  உத்தரவை ரத்து செய்யுமாறும், தனது மனு மீது முடிவு செய்யப்படும்வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, நவாஸ் ஷெரீப் அரசின் மந்திரிசபை ஒப்புதல் இல்லாமல் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக கூடுதல் அட்டார்னி ஜெனரல் இஷ்டியாக் அகமது கான், கோர்ட்டில் தெரிவித்தார். 

முஷரப் மீதான குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானவை என்றும் கூறினார். இந்நிலையில், லாகூர் உயர் நீதிமன்றம், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்த தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது, சட்ட விரோதமானது என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் சையது மசார் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி, சவுத்ரி மசூத் ஜஹாங்கீர் ஆகியோர் ஒருமனதாக இந்த உத்தரவை பிறப்பித்தனர். மேலும், முஷரப் மீதான வழக்கு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்த உத்தரவின் மூலம், முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்தாகி விட்டதாக அரசுத்தரப்பு வக்கீல்களும், முஷரப்பின் வக்கீல்களும் உறுதிப்படுத்தினர். இது, முஷரப்புக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory