» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

சனி 14, டிசம்பர் 2019 10:54:25 AM (IST)

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் வலுத்தது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

அதன்படி கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலீபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானில் 2 நாள் சண்டை நிறுத்தத்தை கொண்டுவர இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் பாக்ராம் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்ற பின்னர் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது. இது குறித்து தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி சலாமி கலீல்ஜாத் கூறுகையில், "நான் தலீபான்களை சந்தித்தபோது, பாக்ராம் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து சீற்றத்தை வெளிப்படுத்தினேன். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலீபான்கள் உண்மையிலேயே விரும்புகிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory