» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு

செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)சவுதியில் உள்ள ஹோட்டல்களில் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித்தனியாக நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றுக்கொண்ட முகமது பின் சல்மான், பழமைவாத சமூகத்தை தாராளவாதத்தின் பக்கம் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நாட்டில் நிலவும் பாலின பாகுபாட்டைகளையும் விதமாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சமஉரிமை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பெண்கள் கார் ஹோட்டுவதற்கு இருந்த தடையை அகற்றிய சவுதி அரேபிய அரசு, ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு இருந்த தடையை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்தது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஹோட்டல்கள் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித்தனியாக நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்த நாட்டில் உள்ள ஹோட்டல்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.

அதே போல் ஹோட்டல்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும், பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரை போட்டு பிரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இனி ஹோட்டல்கள் பாலின அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழை வாயில் வேண்டுமா என்பதை அந்தந்த ஹோட்டல்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அந்த நாட்டின் நகராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsNalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory